காரும் வரல்ல.. பைக்கும் வரல்ல.. எல்லாமே பொய்.. கே.எல்.ராகுல் குடும்பத்தினர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே. ராகுல் திருமணம் சமீபத்தில் நடந்த போது இந்த திருமணத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு பரிசு பொருள் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவை அனைத்தும் பொய்யான தகவல்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் வீட்டை மணமகளின் தந்தை நடிகர் சுனில் செட்டி கொடுத்ததாக கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி சல்மான் கான், விராட் கோலி, தோனி, ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் கே எல் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிகளுக்கு லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பரிசுகள் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து கேஎல் ராகுல் திருமணத்திற்கு வந்த பரிசு பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து கேஎல் ராகுலின் குடும்பத்தினர் கூறிய போது, ‘கேஎல் ராகுல் திருமணத்திற்கு வந்த பரிசு பொருட்கள் குறித்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை, உண்மை அல்ல, தயவு செய்து இது போன்ற தவறான தகவல்களை வெளியிட வேண்டாம், இது போன்ற தகவல்களை வெளியிடும் முன் எங்களுடன் விவரங்களை பகிர்ந்து கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு பத்திரிகை நண்பர்களை கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com