'மாஸ்டர்' நடிகையின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்! விஜய் ஆண்டனி வெளீயீடு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’விஸ்வரூபம்’ ’அரண்மனை’ ’ஆம்பள’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா
சமீபத்தில் இவர் நடித்த ’வடசென்னை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பதும் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
’நோ எண்ட்ரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அழகு கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார். ரமேஷ் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில், அஜேஷ் சதீஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஜம்போ சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Feeling very happy to reveal the title of @andrea_jeremiah next movie #NOENTRY Congrats to @jumbocinemas @aasridhar20 #productionNo2 kudos to the team for the grand success????@Alagukarthik5 @ajesh_ashok @dop_ramesh @PradeepERagav @johnsoncinepro @lightson_media pic.twitter.com/ZXPoVUl6c2
— vijayantony (@vijayantony) September 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com