ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்: நெஞ்சில் பாலை வார்த்த நிறுவனம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகில் பெரும்பாலான நாடுகள் கடந்த 2 மாதமாக ஊரடங்கில் முடங்கி கிடந்தது. இந்நிலையில் பல பெரும் நிறுவனங்கள் கூட ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தை வழங்க முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டன. இதில் பலத் தொழிலாளிகளின் வேலைக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும் ஏற்பட்டது. அதோடு, தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகளின் நிலைமை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
நிலைமை சமாளிக்க, உலகின் பல நாட்டு அரசுகள் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது, அவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தது. ஆனாலும் இக்கருத்து சாத்தியமாகுமா என்ற அச்சம் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது. இத்தகைய நெருக்கடி நிலையில் ஒரு நிறுவனம் தானாக முன்வந்து “தன் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் யாரையும் வேலையை விட்டு நீக்கப் போவதில்லை. எனவே பயம் இல்லாமல் தொழிலாளர்கள் அனைவரும் உங்களது வீட்டில் உள்ளவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
அவ்வளவு பெருந்தன்மையை கொண்டவர், அமெரிக்காவின் மிகப்பெரிய கடன் அட்டை நிறுவனமான மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா தான். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதுபற்றி அஜய் பங்கா “முதலில் லாக் டவுன் ஆரம்பித்த போதே கொரோனா தொடர்பாக யாரும் வேலையை விட்டு நீக்கப்பட மாட்டார்கள். ஊழியர்கள் வேலை குறித்துக் கவலைப்படாமல் தங்களது குடும்பத்தையும், சக ஊழியர்களையும், அவர்களது வாடிக்கையாளரையும் கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டும்” எனக் கூறியதாகத் தற்போது கூறியிருக்கிறார். ஊரடங்கு காரணமாக அமெரிக்க மக்கள் தொகையில் கால்வாசி பேர் தங்களது வேலையை இழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout