இந்த வார எலிமினேஷனில் திடீர் திருப்பம்.. எதிர்பாராத டிவிஸ்ட்..!

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகிறார்.

கடந்த வாரம் நாமினேஷன் சிக்கியவர்களில் ஒருவரான அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர். விஷ்ணு, மாயா, பிரதீப் என ஸ்மால் ஹவுஸில் இருந்து 3 போட்டியாளர்கள், அக்சயா, ஜோவிகா, பூர்ணிமா மற்றும் விசித்ரா ஆகிய 4 போட்டியாளர்கள் பிக் ஹவுஸில் இருந்தும் என மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர்.

இவர்களுக்கு தற்போது வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதால் வரும் வெள்ளிக்கிழமை யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது குறித்த தகவல் கசியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிரடியாக இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அடுத்த நாளே எழுத்தாளர் பவா செல்லதுரை தானாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். எனவே ஒரே வாரத்தில் இரண்டு பேர் வெளியேறி விட்டதால் இந்த வாரம் நாமினேஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.