தமிழகத்தில் இ-பாஸ் தேவையில்லை...! இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இனி இ-பாஸ் தேவையில்லை என்றும், இ-பதிவு முறையே போதுமானது என்றும் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்தோ, வெளிமாநிலங்களில் இருந்தோ தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு இ-பாஸ் முறை என்பது கட்டாயத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டங்களுக்குள் பயணம் செய்யவிருப்பவர்களுக்கு, இ-பாஸ் முறை அவசியமில்லை என்றும், இ-பதிவு முறை போதுமானது என்றும் அரசு கூறியுள்ளது.
பிற மாவட்டங்களுக்கு திருமணம், இறப்பு, பணி காரணமாக செல்பவர்களுக்கு இ-பாஸ் கொண்டு பயணிக்க வேண்டும் என்று, ஒரு சில ஊடகங்கள் தவறுதலான செய்தியை பரப்பி வருகின்றன. இதற்கு பதிலாக மக்கள் அத்தியாவசிய தேவைகளான, திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக செல்லும்போது, தங்களுடைய ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் இ-பதிவு(e-registration) செய்து கொள்ளலாம். இ-பதிவை வைத்துக்கொண்டு மக்கள் எந்த தடையும் இல்லாமலும் பயணம் செய்யலாம், என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இ-பாஸ் பதிவு செய்தால், 2-3 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இ-பதிவில் பதிவு செய்துவிட்டு உடனுக்குடன் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments