நிலவேம்பு கசாயம் வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்தாக நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சுகாதார செயலாளர், அமைச்சர்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த நிலையை பார்வையிட வந்த மத்திய குழு உள்பட அனைவரும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் நல்ல மருந்து என்றும் அதை முறைப்படி தயாரித்து வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசும், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், சில நடிகர்களின் ரசிகர்களும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர். ஒருசிலர் இந்த கசாயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி வந்தாலும் இதனால் டெங்கு குணமாகும் என்றோ அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் என்றோ அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் டுவிட்டரில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை குறைத்துக்கொண்ட கமல்ஹாசன் நேற்று மீண்டும் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்' என்றும், 'ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்' என்றும் பதிவு செய்துள்ளார். 

More News

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோதிகா!

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஜோதிகாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு IndiaGlitz தனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் நேரில் சந்தித்த விஜய்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் முதல் காட்சி திரையிடப்படவுள்ள நிலையில் சற்றுமுன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் மீண்டும் சந்தித்தார்.

'வெற்றி' திரையரங்கில் ரசிகர்களுடன் 'மெர்சல்' பார்க்கும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பக்கா மாஸ் என்றும் குறிப்பாக மாறன் கேரக்டர் அட்டகாசமாக இருப்பதாக

சென்னை காசியில் 'மெர்சல்' கொண்டாட்டம் ஆரம்பம்

சென்னையில் ரசிகர்கள் மற்றும் செலிபிரிட்டிகளின் விருப்பத்திற்குரிய திரையரங்கான காசி திரையரங்கில் 'மெர்சல்' திரைப்படம் எதிர்பாராத காரணமாக திரையிடப்படும் வாய்ப்பு இல்லை

வைகோவுடன் இணைகிறாரா இளையராஜா?

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்ற பெரும்புகழை பெற்ற ராணி வேலுநாச்சியாரின் நாடகம் சமீபத்தில் சென்னையில் நடந்தது.