நிலவேம்பு கசாயம் வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்தாக நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சுகாதார செயலாளர், அமைச்சர்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த நிலையை பார்வையிட வந்த மத்திய குழு உள்பட அனைவரும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் நல்ல மருந்து என்றும் அதை முறைப்படி தயாரித்து வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசும், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், சில நடிகர்களின் ரசிகர்களும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர். ஒருசிலர் இந்த கசாயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி வந்தாலும் இதனால் டெங்கு குணமாகும் என்றோ அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் என்றோ அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் டுவிட்டரில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை குறைத்துக்கொண்ட கமல்ஹாசன் நேற்று மீண்டும் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்' என்றும், 'ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்' என்றும் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout