இந்த படம் பார்க்க டிஷ்யூ பேப்பர் தேவையில்லை: ஜே சதீஷ்குமாரின் டுவீட்

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

சமீபத்தில் வெளிவந்த கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த ஜே சதீஷ்குமார், தற்போது அவர் தயாரித்துள்ள 'அண்டாவ காணோம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தனது டுவிட்டரில் அறிவித்துள்ள தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் மேலும் கூறியபோது, இந்த படம் ஒரு 'யூ' படம் என்பதால் குடும்ப ஆடியன்ஸ்கள் தைரியமாக வரலாம். ஏ பட ஆடியன்ஸ்களும் பார்க்கலாம். ஆபாச வசனமோ, பிட்டு சீன்களோ இந்த படத்தில் இல்லை. மேலும் இந்த படத்தை பார்க்கும்போது டிஷ்யூ பேப்பர் தேவையில்லை. அதுமட்டுமின்றி படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது ஒளிய தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் வேல்மதி இயக்கியுள்ள 'அண்டாவ காணோம்' படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரேயாரெட்டி நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க கிராம பின்னணியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.