சென்சார் கட் இல்லாமல் ரிலீஸ் ஆவது உறுதி.. 'லியோ' விநியோகிஸ்தர் தகவல்..!
- IndiaGlitz, [Saturday,October 07 2023]
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் ஆனது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்தனர் என்பதையும் பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் சென்சார் இல்லாத டிரைலர் தான் சமீபத்தில் வெளியானது என்பது அதனால் தான் இந்த ட்ரெய்லரில் ஆபாச வார்த்தைகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இங்கிலாந்தில் ‘லியோ’ படத்தை ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் சான்றிதழ் பெற்று திரையிட போவதாக இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை பெற்றிருந்த அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இங்கிலாந்து நாட்டில் ‘லியோ’ திரைப்படத்திற்கு எந்த விதமான கட் இல்லாமல் என்ன சான்றிதழ் கிடைக்கிறதோ அதை அப்படியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். இதனை அடுத்து சில நாட்கள் கழித்து 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கக்கூடிய வகையில் மீண்டும் சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது கட் இல்லாமல் சென்சார் செய்யப்பட்டு ‘லியோ’ திரைப்படம் தயாராக இருப்பதாகவும் எந்தவித கட் இல்லாமல் சில நாட்கள் இங்கிலாந்தில் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Censor boards, get ready to be THALAPATHIFIED! We’re coming with #LEO to you on Monday ❤️🔥
— Ahimsa Entertainment (@ahimsafilms) October 7, 2023
As promised, NO CUTS! 🔥
Much love to @7screenstudio for expertly managing the film's intricacies, allowing us to direct all our firepower towards release plans and promotions 🤜 pic.twitter.com/iEz8dE479r