முதல்வர் பழனிசாமியின் கொரோனா சோதனை ரிசல்ட்: பரபரப்பு தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாக கூறப்பட்டதால் முதல்வர் பழனிசாமி உள்பட முதல்வர் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: கொரோனாவின் கொடூர முகம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம்

திரையுலகில் இல்லாத விஜயகுமாரின் ஒரே மகள்!: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் குடும்பத்திலுள்ள அனைவருமே கிட்டத்தட்ட திரையுலகில் இருக்கும் நிலையில் அவரது ஒரே ஒரு மகள் மட்டும் திரை உலகிலிருந்து சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார்

'டாக்டர்' படத்தின் புதிய அப்டேட்: 2 நிமிட வீடியோ வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் 'டாக்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்!!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் கொள்ளைச் சம்பவங்கள்!!!

கேரள அரசியலுக்கே உலை வைக்கும் அளவிற்கு தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் பற்றிய தேசிய புலனாய்வு முகமை (NIA) தற்போது பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

திருப்பதி ஏழுமலையானுக்கே இந்த நிலைமையா??? பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்!!!

கொரோனா ஊரடங்கினால் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருமானம் குறைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.