நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையா? தலைமை நீதிபதி தகவல்

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரிந்ததே. இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அதே தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை அறிய அனைவரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என்று சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

More News

விமர்சனங்களுக்கு தக்கப் பதிலடி… சமூகவலைத் தளத்தில் பாராட்டுகளைக் குவித்து வரும் தமிழக முதல்வர்!!!

கொரோனா வைரஸ் பரவல், நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு பெரும் தவறிழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள்

10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 10 கிராமங்களை காப்பாற்றிய நடிகர் கார்த்தி!

ஒரு பக்கம் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது சகோதரர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன்

இன்னும் ஒரே ஒருநாள் தான், எங்க தல வர்றாரு விசில் போடு: பிரபல நடிகையின் டுவீட்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது என்பதும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே 

பிறந்தநாளில் நயனுடன் ரொமான்ஸ் போஸில் விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில நாட்களாக கோவா சுற்றுப்பயணத்தில் உள்ளனர் என்பது தெரிந்ததே.

நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த பட தகவலை அறிவிக்கும் பிரபல இயக்குனர்!

கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'சைக்கோ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.