ஆணுறை இல்லாததால் பாதுகாப்புக்காக இளைஞர் எடுத்த பயங்கர முடிவு… பலியான உயிர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அகமதாபாத்தில் காதலியுடன் உல்லாசமாக இருக்க நினைத்த இளைஞர் ஒருவர் ஆணுறை இல்லாததால் தன்னுடைய ஆணுறுப்பில் பிசினை தடவியிருக்கிறார். இதனால் அவர் பரிதாபமாக உயிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சல்மான் மிர்சா என்ற 25 இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை அழைத்துக் கொண்டு ஜுஹாபுரா பகுதியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அந்த ஹோட்டலுக்குச் சென்றதும் அந்த ஜோடி உல்லாசமாக இருக்க நினைத்துள்ளனர். ஆனால் பாதுகாப்புக்கு ஆணுறை எடுத்துவரவில்லை என்பதை உணர்ந்த அந்த இளைஞர் விந்து வெளியேறாமல் இருக்க தன்னுடைய ஆணுறுப்பில் பிசினை தடவி இருக்கிறார்.
இதனால் அந்த இளைஞர் சிறிது நேரத்தில் மயக்கம் வருவதை போல உணர்ந்தவுடன் ஹோட்டலை காலி செய்துகொண்டு அவசரமாக வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால் வழியிலேயே நடுரோட்டில் மயங்கி விழுந்திருக்கிறார். இதைப்பார்த்த இளைஞருக்குத் தெரிந்த நபர் ஒருவர் அவரை வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் உறவினர்கள் சேர்ந்துகொண்டு இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் கடும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பாதுகாப்புக்காக இளைஞர் வலுவான பிசினை தடவி இருக்கிறார். அவரது உயிரிழப்புக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியிட்டு உள்ளனர். மேலும் இந்தக் காதல் ஜோடி போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com