பகலில் காண்டம் விளம்பரம் வேண்டாம்: செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுரை
- IndiaGlitz, [Tuesday,December 12 2017]
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காண்டம் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பகலில் காண்டம் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதால் குழந்தைகள் அந்த விளம்பரத்தை பார்க்கும் நிலை ஏற்படுவதாகவும் இதனால் பெற்றோர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
இந்த புகார்கள் குறித்து ஆலோசனை செய்த ஸ்மிரிதி இரானி தலைமையிலான மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி மட்டும் காண்டம் விளம்பரத்தை ஒளிபரப்பவும் என்ற அறிவுரையை தொலைக்காட்சி சேனல்களுக்கு வழங்கியுள்ளது
No condom ads between 6 am and 10 pm, says I&B ministry