சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை.. விஜய் எடுத்த அதிரடி முடிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு சிறுவர் சிறுமியர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் சமீபத்தில் இந்த கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் என்பது தெரிந்தது. அடுத்த கட்டமாக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில் இதுவரை காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் காவல்துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் கூறியதாகவும் 50 ஆயிரம் கலந்து கொள்ளும் வகையில் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர், முதியவர்கள் 5000 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேர் கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
இருப்பினும் 50 ஆயிரம் பேர்கள் மட்டும் தான் இந்த மாநாட்டிற்கு வருவார்களா? அதைவிட அதிகமாக வருவார்களா? காவல்துறை அனுமதி அளிக்குமா? காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால் விஜய் நீதிமன்றம் செல்வரா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com