கொரோனாவால் தள்ளிப்போகிறதா 'சுல்தான்' ரிலீஸ்: எஸ்.ஆர்.பிரபு விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியதாக தெரிகிறது
இந்த நிலையில் இதுகுறித்து எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டரில் ‘சுல்தான்’ ரிலீஸ் குறித்து விளக்கமளித்துள்ளார். என்னுடைய ஒரு சில நண்பர்கள் ‘சுல்தான்’ படத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் ‘சுல்தான்’ ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
‘சுல்தான்’ படத்தை திரையரங்குகளில் ரசிக்க வரும் ரசிகர்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா விதி முறைகளை கடைபிடித்து மகிழ்ச்சியாக படம் பார்க்க வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்றும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
Many of our friends are asking whether we are releasing #Sulthan on 2nd April concerning Covid scenario. So far there is no change in that decision. We are sticking to the date! So pls Wear Mask, take proper precautions & wait to enjoy the max fun on screen????#JaiSulthan
— SR Prabhu (@prabhu_sr) March 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments