ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா? அப்பல்லோ நிர்வாகம் அதிரடி பதில்
- IndiaGlitz, [Wednesday,September 27 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் பார்த்ததாக கூறிய அமைச்சர்கள் தற்போது திடீரென பல்டி அடித்து ஜெயலலிதாவை தாங்கள் மட்டுமின்றி யாருமே பார்க்கவில்லை என்று கூறினர். சசிகலாவுக்கு பயந்தே ஜெயலலிதா இட்லி சாப்பிடுவதாக பொய் சொன்னதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர்கள் கூறினர். ஆனாலும் ஒருசில அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்தது உண்மைதான் என்று கூறியதால் யார் கூறுவது உண்மை? யார் கூறுவது பொய்? என பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் ஹரிபிரசாத் இதுகுறித்து கூறியதாவது:
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. மருத்துவமனை பாதுகாப்புகான சிசிடிவி கேமிரா காட்சிகளின் பதிவுகள் மட்டுமே உள்ளன
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் விசாரணை கமிஷன் முன்பும் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க தயார்.
ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது