ஒரே ஷெட்யூலில் முடிவடையும் தனுஷின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Saturday,August 31 2019]

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் லண்டனில் நடைபெற உள்ளதை அடுத்து படக்குழுவினர் அனைவரும் லண்டனுக்கு சென்றுள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிக்க மொத்த படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது ஒரு கேங்க்ஸ்டர் படம் என்றும் இந்திய கேங்க்ஸ்டரான தனுஷ், ஐரோப்பிய கேங்க்ஸ்டர்களுடன் மோதும் விறுவிறுப்பான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.. ஏற்கனவே தனுஷ் ஒருசில கேங்க்ஸ்டர் படங்களில் நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை வித்தியாசமாக உருவாக்கவிருப்பதாக கூறப்படுகிறது
 

More News

டுவிட்டர் சி.இ.ஓவுக்கே இந்த நிலைமையா? ஹேக்கர்கள் கொடுத்த அதிர்ச்சி

அரசியல்வாதிகள், பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் டுவிட்டர் கணக்குகளை அவ்வப்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து அதிர்ச்சி தருவது வழக்கமான ஒன்றே.

'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இணைந்த 'கோலமாவு கோகிலா' டீம்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா 'சங்கத்தமிழன்'?

வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்',  விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்புகள்

ஜெயம் ரவியின் படத்தில் இணையும் 'செக்க சிவந்த வானம்' பட நடிகை!

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படமான 'ஜன கன மன' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டாப்சி மற்றும் ஈரான் நாட்டின் நடிகை ல்னாஸ் நோரோஸி

இந்தியாவின் முக்கிய வங்கிகள் இணைப்பு!

இந்தியாவின் வங்கிகள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ஒருசில இந்திய வங்கிகளின் இணைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது