பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி: அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்படங்கள் வெளியாகும் போதும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டங்களின் போதும் தவறாமல் இடம்பெறுவது பேனர். பிரமாண்டமான பேனர்ளால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பேனர்கள் குறித்தே பல வழக்குகளை தொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது. அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோஷன குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி இனிமேல் கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 1959ஆம் ஆண்டு சட்டத்தை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவால் அரசியல் தலைவர்களின் பேனர்கள், நடிகர்களின் பேனர்கள் இனி வைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout