'விஸ்வாசம்' தடை: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக விஸ்வாசம்' திரைப்படத்தை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்ததால் அந்த பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கோவை பகுதியின் விநியோகிஸ்ர் சாய்பாபா தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சற்றுமுன் விசாரணைக்கு வந்தபோது 'சாய்பாபா பெற்றிருந்த கடன் தொகை ரூ.78 லட்சம் ரூபாயில் முதலாவது தவணையாக ரூ.35 லட்சத்தை உடனடியாக திருப்பித் தரவும், மீதமுள்ள பணத்தை 4 வாரங்களுக்குள் தருவதாகவும் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதியை பைனான்சியரும் ஏற்று கொண்டதால் விஸ்வாசம் படத்தை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மேற்கண்ட மூன்று நகரங்களிலும் எந்தவித பிரச்சனையும் இன்றி நாளை விஸ்வாசம் படம் திரையிடப்படுகிறது.

More News

'கடாரம் கொண்டான்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

விஸ்வாசம் படத்திற்கு தடை: 3 ஏரியா அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று ஏரியாக்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'பேட்ட' ரிலீசுக்கு அடுத்த நாள் வெளியாகும் அனிருத் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் பிரபலத்தின் வாரிசு அறிமுகம்

கடந்த ஆண்டின் வெற்றிப்பட நாயகனாக விளங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'மாமனிதன்'.

சிம்பு-சீமான் படத்தின் தயாரிப்பாளர் யார்?

சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படம் ஒரு பரபரப்பான அரசியல் கலந்த படமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்