close
Choose your channels

எலிமினேஷன் யாருன்னு இனிமே வெளியே கசியாது: பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி!

Friday, October 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டே நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சி குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் 14 போட்டியாளர்கள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு தகவலின்படி இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல் முன்கூட்டியே தெரியாது என தெரிகிறது.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் போட்டியாளர்களை கமல்ஹாசன் சந்திப்பார். அன்றைய தினம் அவர் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளரை அறிவிப்பார். இந்த நிகழ்ச்சி ஒரு சில குறிப்பிட்ட பார்வையாளர்கள் முன் நடக்கும். அப்போது இந்த நிகழ்ச்சி படமாக்கப்படும்போதே பார்வையாளர்கள் மூலம் அந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டது யார் என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும்.

ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பாதுகாப்பை கணக்கில் கொண்டு பார்வையாளர்கள் இல்லாமலேயே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எனவே கமல்ஹாசன் அறிவிக்கும் அந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்பது வெளியே தெரியாது என்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment