'அமலாபால்' கார் வாங்கியதில் விதிமீறல் இல்லை: புதுவை அமைச்சர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தகவல் உண்மையாக இருந்தால் அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை ஆளுனர் கிரண்பேடியும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜஹான் சற்றுமுன்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'புதுச்சேரியில் அமலாபால் சொகுசுக்கார் வாங்கியதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று கூறினார். இதே கருத்தை புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout