இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Sunday,November 26 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

வெகுவிரைவில் கட்சியின் பெயர் மற்றும் கொள்கையை அறிவிப்பேன் என்று கூறிய கமல், அரசியலில் எந்த கட்சியும் தீண்டத்தகாத கட்சி இல்லை என்றும், தமிழக மக்களின் நலனுக்காக ஒருசில கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று கூறிய கமல், மாற்றத்தை விரும்புகிறவர்கள் நிச்சயம் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் கூறினார்.

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர தனக்கு தைரியம் இருப்பதாகவும், தமிழக அரசியலில் தன்னை முன்னிறுத்தாமல், மாற்றத்தை மட்டுமே முன்னிறுத்த போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

More News

கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' டீசர் விமர்சனம்

'துருவங்கள் 16' படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது படம் தான் 'நரகாரசுரன்'

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் நயன்தாராவுக்கு வேண்டாம்: லட்சுமி ராமகிருஷ்ணன்

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அறம்' திரைப்படம் நல்ல ஹிட்டாகி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவர் பொருத்தமானவர் என்பதை நிரூபித்ததாக கூறப்பட்டது.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' தெலுங்கு டைட்டில்

சூர்யாவின் திரைப்படங்கள் பொதுவாக தமிழை போலவே தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது தெரிந்ததே. அவர் நடித்த சிங்கம் படங்களின் மூன்று பாகங்களும் தெலுங்கில் நல்ல ஹிட்

ஓவியாவின் மடியில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா?

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றார். அவருடைய பெயரில் ஓவியா ஆர்மி, ஓவியா படை என ஆரம்பிக்கப்பட்டு சமூக வலைத்தளமே பரபரப்பில் இருந்தது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.