விளம்பரம் இல்லை, புரமோஷன் இல்லை.. ஆனாலும் சாதனை வசூல்.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' குவித்த கோடிகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாளத் திரைப்படமான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் தமிழில் டப் செய்யாமல் மலையாளத்திலேயே தமிழகத்தில் வெளியானது என்பதும் இந்த படம் கேரளாவில் விட தமிழகத்தில் மிக அதிக வசூல் செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
குறிப்பாக இந்த படத்தில் கமல்ஹாசனின் ’குணா’ படத்தின் ரெஃபரன்ஸ் இருந்ததை அடுத்து தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்து விட்டது என்பதும் இந்த படத்தை பார்த்து இளைஞர்கள் முதல் குடும்ப ஆடியன்ஸ் வரை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே நூறு கோடி ரூபாய் வசூல் செய்த பின்னரே தமிழகத்தில் ரிலீஸ் ஆன இந்த படம் சமீபத்தில் ரூ.175 கோடி வசூல் ஆனதாக கூறப்பட்டது. அடுத்த சாதனையாக ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் மலையாள திரைப்படம் ஒன்று தமிழில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்வது இதுவே முதல் முறை என்றும் அதுவும் ஒரு பெரிய ஸ்டார் இல்லாத சின்ன பட்ஜெட் படம் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் தமிழ்நாட்டில் தமிழில் டப் செய்யப்படாமல் மலையாளத்தில் வெளியானது என்பதும் பேப்பர் விளம்பரம் முதல் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் பிரஸ்மீட் கூட இல்லாமல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை என்பதும் முழுக்க முழுக்க படம் பார்த்தவர்கள் பரப்பிய பாசிட்டிவ் விமர்சனம் காரணமாகவே இந்த படம் சூப்பர் ஹிட் ஆகிய 50 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து ஒரு நல்ல படத்திற்கு எந்த விதமான விளம்பரமும், புரமோஷனும் தேவையில்லை என்றும், கண்டெண்ட் நன்றாக இருந்தால் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழ் திரைப்படங்கள் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments