பார்த்திபன் அதையும் செய்துவிட்டார், அதனால் அதுக்கும் மேல... 'ஓநாய்கள் ஜாக்கிரதை' இயக்குனரின் புது முயற்சி!

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

ஒரே ஒரு நடிகரை மட்டும் வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் ’ஒத்த செருப்பு’ படம் மூலம் பார்த்திபன் அதை செய்து விட்டதால் ஒரு நடிகர் கூட இல்லாமல் படம் எடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும் ’ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான திரைப்படங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் என்பதும் ஒரே ஒரு நடிகர், ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக தற்போது நடிகர்களை இல்லாமல் முதல் முறையாக ஒரு படம் உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தை இயக்கி விமர்சன ரீதியில் பிரபலமான இயக்குனர் பட்டாபிராமன் என்பவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஒரு நடிகர் கூட நடிக்கவில்லை என்றும் உலக சினிமா வரலாற்றில் நடிகர்களே இல்லாமல் உருவாக்கப்படும் முதல் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் ஆங்கிலம் உள்பட பழமொழிகளில் உருவாகும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் பட்டாபிராமன் கூறுகையில் ’ஒரு ஒரே ஒரு நடிகர் மட்டும் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அதை பார்த்திபன் செய்து விட்டதால் அந்த ஒரு நடிகர் கூட இல்லாமல் முழுக்க முழுக்க காட்சி அமைப்பு மற்றும் திரைக்கதை மட்டுமே அமைந்துள்ள ஒரு படத்தை இயக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த படத்தில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் 2023 கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதிஷ் உத்ரியன் இசையமைப்பில், விஜய் திருமூலம் ஒளிப்பதிவில் தேவராஜ் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளை ரெமி ஸ்டுடியோ மேற்கொள்ளவுள்ளது. எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன்ஸ் சார்பாகப் பட்டாபிராமன் தயாரித்து இயக்குவதோடு படத்தொகுப்பு பணியையும் அவரே கவனிக்க உள்ளார்.

More News

ஓவர் கோட்டை கழட்டி எறிந்த மச்சினிச்சி... சாண்டி மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா: வைரல் வீடியோ

பிரபல நடன இயக்குனர் சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா வினோலினி செம டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவின் நடுவில் அவர் தனது ஓவர் கோட்டை கழட்டி போடும் காட்சியும் உள்ளது. 

தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம்: டைட்டில் அறிவிப்பு!

கிரிக்கெட் உலகின் தல என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி சமீபத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் அவர் முதல் முதலாக ஒரு தமிழ்

கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை காலமானார். திரையுலகினர் இரங்கல்!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86. 

'குக் வித் கோமாளி' ஸ்ருதிகாவின் திருமண புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்கள்..!

'குக் வித்கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. 

இந்த மூணும் செஞ்சவங்க 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை: ரஜினிகாந்த்

மது, சிகரெட், அசைவம் ஆகிய மூன்றையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததாக எனக்கு தெரிந்தவரை சரித்திரமே இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்