'இரும்புத்திரை'யில் ஆதார் ஆபத்து குறித்த காட்சிகளா? இயக்குனர் மித்ரன் விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,May 09 2018]
விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாதி மட்டும் இன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. முதல் பாதி காட்சிகள் முடிந்ததும் இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால் சார். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது. காரணம் இரும்புத்திரைக்கு படத்துக்கு அது சரியாக இருக்கும் என்பதால் தான். இரும்புத்திரை திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும். இரும்புத்திரை ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல, டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும் என்று கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மித்ரன் , லைகா குழுமத்தை சேர்ந்த கருணா , அயுப் கான் , எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஹாலிவுடில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் “ இரும்புத்திரை “ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் இன்று செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.