பூர்ணிமாவின் உடலை வர்ணிக்கும் நிக்சன்.. வினுஷா மேட்டரில் இருந்து பாடம் கற்கவில்லையா?
- IndiaGlitz, [Monday,December 11 2023]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நிக்சன் ஏற்கனவே வினுஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் கண்டனத்தை பெற்றார். அவரது அங்க அவயங்களை அவர் தரக்குறைவாக பேசியது சக போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமின்றி பார்வையாளர்களின் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்த நிலையில் வினுஷா மேட்டரை அடுத்து தற்போது பூர்ணிமா குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நேற்றைய எபிசோடில் விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், உள்ளிட்டவர்களை கமல்ஹாசன் சரமாரியாக திட்டினார். இது மாயா மற்றும் பூர்ணிமா புல்லிங் குரூப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புல்லிங் குரூப்பில் உள்ளவர்கள் செய்த தவறை கமல் கண்டு கொள்ளவே இல்லை என்றும், குறிப்பாக நிக்சன் ‘சொருகிறுவேன்’ என்று கூறியதை கூட மஞ்சள் கார்டு மட்டுமே காண்பித்து கமல் எச்சரிக்கை விட்டதாகவும் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் எபிசோடு முடிந்ததும், தங்களுக்கு பிடிக்காதவர்களை கமல் விமர்சனம் செய்ததால் மகிழ்ச்சியுடன் பூர்ணிமா, மாயா, விக்ரம், நிக்சன் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பூர்ணிமா ’அப்படி என்னடா என்கிட்ட இல்ல, கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்ன’ என்று கூற அப்போது நிக்சன், பூர்ணிமாவுக்கு அழகு இல்லையா, அறிவு இல்லையா? பாடி இல்லையா? என்று நிக்சன் கூறுகிறார்.
வினுஷாவை தவறாக பேசியதால் வருத்தம் அடைந்தேன், வெளியே சென்றவுடன் அவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என்று கமல் முன் கூறிய நிக்சன், மீண்டும் பூர்ணிமாவை இவ்வாறு வர்ணித்திருப்பதை பார்த்தால் அவர் இன்னும் பாடம் கற்கவில்லை என்றுதான் தெரிகிறது என பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
#Nixen -Wat Body illaya ? 🤔#BiggBossTamil#BiggBossTamil7 pic.twitter.com/fpYCRZZxpS
— BBTamilVideos (@BBTamilVideos) December 10, 2023