கமல் சார் திட்டின உடனே என்ன ஆச்சு பாரு? அர்ச்சனா குறித்து நிக்சன் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 70 நாட்களுக்கு மேல் நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் மட்டும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து உள்ளன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக எந்த சீசனிலும் இல்லாத வகையில் கமல்ஹாசன் மீது பார்வையாளர்கள் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி உள்ளிட்டவர்களை கடுமையாக கமல்ஹாசன் திட்டியது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விஷ்ணுவிடம் நிக்சன் பேசும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன.
‘கமல் சார் திட்டிய உடனே அர்ச்சனா அடுத்த நாள் காலையில எப்படி மாறினார்கள் பார். நான் இந்த வாரம் ஃபுல்லா தப்பா இருந்துட்டேன் என்று கூறி சூப்பராக எல்லோரிடமும் ரிஜிஸ்டர் செய்ய முயன்றார். உண்மையிலேயே அவர் இது குறித்து உணர்ந்திருந்தால் கமல் சார் சொல்றதுக்கு முன்னாலே அதை சொல்லி இருக்க வேண்டும். வலிக்குதுங்க என்று சொல்லியும் அந்த விஷயத்தை அவர் திரும்பத் திரும்ப பேசினார் என்றால் அவர் வேண்டுமென்றே தான் செய்கிறார்’ என்று கூறுகிறார்.
நிக்சனின் இந்த பேச்சுக்கு விஷ்ணு எந்த விதமான ரியாக்சனும் இல்லாமல் அமைதியாக இருப்பதுடன் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் அர்ச்சனா மற்றும் நிக்சன் பிரச்சனை இப்போதைக்கு முடியாது என்றே தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com