அவன் அவன் ஜெயிக்கனும்ன்னு ஆடனும்.. 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க்கில் நிக்சன் வாக்குவாதம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் டிக்கெட் பினாலே என்ற டாஸ்க் நடந்து வருகிறது,. இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் தீவிரமாக விளையாடுகின்றனர்.
இதில் ஒரு சில போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் மீதமுள்ள போட்டியாளர்கள் ஆவேசமாக விளையாடுகின்றனர். இந்நிலையில் திடீரென நிக்சன் வாக்குவாதத்தை தொடங்குகிறார். ’இது வந்து தனிப்பட்ட ஒரு கேம், இரண்டு பேர் சேர்ந்து விளையாடும் கேம் அல்ல, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்று மணி, ரவீனாவை பார்த்து கூறுகிறார்.
இந்த கேமில் யாருக்கு பாயிண்ட் போக கூடாது என்று விளையாடுவார்கள், அதை எப்படி நீ தனியாக விளையாடுவாய்? என்று தினேஷ் கேள்வி கேட்கிறார். எல்லாமே பண்ணலாம், ஆனால் அதன் நோக்கம் என்னன்னு என்று நான் கேட்கிறேன் என்று நிக்சன் கூற ’அது எனக்கு புரிகிறது’ என அர்ச்சனா கூறுகிறார்.
அதன் பிறகு நிக்சன் ரவீனாவை பார்த்து ’மணி ஜெயிக்கணும் என்று நீ ஆடுகிறார்’ என்று கூற அதனை ரவீனா ஒப்புக்கொள்ளவில்லை இதனை அடுத்து தினேஷ் மற்றும் நிக்சன் இடையே வாக்குவாதம் வளர்கிறது. மொத்தத்தில் இந்த டாஸ்க் முடியும் முன்பு போட்டியாளர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆவேசமாக சண்டை போடுவார்கள் என தெரிகிறது. மொத்தத்தில் இன்றைய எபிசோடு காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout