அடிச்சு திருந்தாத பிள்ளையை ஆப்பு வைத்தும் திருத்தலாம்.. நிக்சன் அப்பாவின் கலகல எண்ட்ரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி 80 ஆவது நாளாக இன்று ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி செல்வதால் கூடுதல் விறுவிறுப்பு இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் சென்டிமென்ட் ஆகவும், அதே நேரத்தில் கலகலப்பாகவும் உள்ளது என்பதை நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்
இந்த நிலையில் இன்று நிக்சன் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். அவர் நிக்சனிடம் இப்ப சரியான நேரத்தில் எழுந்து இருக்கிறாயா? 7 மணிக்கு சரியாக எழுந்திருக்கிறீயா? வீட்டில் இருக்கும் போது நாய் மாறி குரைத்தால் கூட எந்திரிக்க மாட்டான்’ என்று காமெடியாக சொல்கிறார்.
’இவ்வளவு நாளாக நாங்க போராடினோம், மாறமாட்டானா மாற மாட்டானா என்று இருந்தோம். ஆனால் நீங்கள் எல்லோரும் அவனை வச்சு செஞ்சீர்கள்’ என்று தெரிவித்தார். மேலும் ‘இதிலிருந்து தான் நான் ஒன்று கத்துக்கிட்டேன், அடிச்சு திருந்தாத பிள்ளையை ஆப்பு வைத்தும் திருத்தலாம் என்று எங்களுக்கு தெரிவித்தார்
நிக்சன் அப்பாவின் ஒவ்வொரு பேச்சையும் போட்டியாளர்கள் ரசித்து கைதட்டி மகிழ்ந்த காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments