close
Choose your channels

உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு.. திடீரென ஆவேசமான நிக்சன்..!

Wednesday, October 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர் என்றும் அதனால் இந்த சீசன் சுவாராசியமாக சென்று கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமாவில் நிக்சன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் ஆவேசமாக மோதிக்கொள்ளும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’உனக்கு பேச தகுதி இல்லை என்று நீ எப்படி சொல்லலாம்? நீ யார் என்னை அவ்வாறு பேச? உழைத்து, பாட்டு பாடி, கஷ்டப்பட்டு நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன், என்னை பார்த்து தகுதி இல்லை என்று சொல்வதற்கு உனக்கு தகுதியே கிடையாது என்று பிரதீப்பை பார்த்து நிக்சன் ஆவேசமாக கூறுகிறார்.

மேலும் ‘ நீ இந்த கேமை பக்காவாக புரிஞ்சுகிட்டு, தந்திரத்துடன் தான் இங்கே வந்திருக்கிறாய். கேவலமான தந்திரத்துடன் விளையாடி இந்த கேமை ஜெயிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு இல்லை. உன்கிட்ட திறமை இல்லை, ஆனால் என்கிட்ட திறமை இருக்குது என்று நிக்சன் கூற உடனே பிரதீப் ’பாடி காட்டு’ என்று கேட்க ’பாடி காட்டு, ஆடி காட்டு என்றெல்லாம் கூறுவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை, உனக்கு வரவில்லையா மூடிட்டு உட்காரு’ என்று கூறினார்.

நிக்சனின் ஆவேசமான பேச்சைக் கேட்டு பிரதீப் அதிர்ச்சியடைந்துள்ள காட்சியுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வந்துள்ளது. மொத்தத்தில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் ஒரு பஞ்சாயத்து இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment