close
Choose your channels

நிவின்பாலி-நட்டி நட்ராஜ் பட டைட்டில் அறிவிப்பு

Monday, January 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் தமிழ் படம் ஒன்றை அறிமுக இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'ரிச்சி' என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன 'Ulidavaru Kandanthe' என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி என்பவர் ரிச்சி என்ற பத்திரிகையாளர் கேரக்டரில் நடித்ததோடு இந்த படத்தை இயக்கவும் செய்தார். அந்த கேரக்டரே தற்போது தமிழ் ரீமேக் டைட்டிலாகவும் அமைந்துள்ளது.
நிவின்பாலி, நட்டி நட்ராஜ், ஷராதா ஸ்ரீநாத், பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அசோக் செல்வனும், நிவின்பாலியின் தந்தையாக விஷால் தந்தை ஜி.கே.ரெட்டியும் நடித்துள்ளனர். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படம் தூத்துக்குடி பின்னணியில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment