நிவின்பாலின் முதல் நேரடி தமிழ் படம் 'ரிச்சி' ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நேரம், பிரேமம் ஆகிய படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது தமிழில் "ரிச்சி" என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நிவின்பாலியுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் உள்பட பலர் நடித்துள்ளனர். கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க ஒளிப்பதிவு பணியை பாண்டி குமார் கவனித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் "ரிச்சி" படத்தின் விநியோக உரிமையை, 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' என்று தொடர்ந்து வெற்றி படங்களாக குறி வைத்து வெளியிடும் 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பெற்றுள்ளார்.
இதுகுறித்து Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் கூறியதாவது: "தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை. நான் வெளி இட்ட முந்தைய படங்களை போலவே " ரிச்சி" படத்தின் கதையும், படமாக்கப்பட்ட விதமும், படத்தின் வெற்றியை நிச்சயமாக்குகிறது. டிசம்பர் 8ஆம் தேதி 'ரிச்சி' வெளியாகும் . நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்" என்று பெருமையுடன் கூறினார் '
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com