நிவின்பாலின் முதல் நேரடி தமிழ் படம் 'ரிச்சி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 16 2017]

நேரம், பிரேமம் ஆகிய படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது தமிழில் ரிச்சி என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நிவின்பாலியுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் உள்பட பலர் நடித்துள்ளனர். கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க ஒளிப்பதிவு பணியை பாண்டி குமார் கவனித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் ரிச்சி படத்தின் விநியோக உரிமையை, 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்'  என்று தொடர்ந்து வெற்றி படங்களாக குறி வைத்து வெளியிடும்  'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பெற்றுள்ளார்.

இதுகுறித்து Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் கூறியதாவது: தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை.  நான் வெளி இட்ட முந்தைய  படங்களை போலவே ரிச்சி படத்தின் கதையும், படமாக்கப்பட்ட விதமும், படத்தின் வெற்றியை நிச்சயமாக்குகிறது. டிசம்பர் 8ஆம் தேதி 'ரிச்சி' வெளியாகும் . நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும் என்று பெருமையுடன் கூறினார் '
 

More News

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் 2வது திடீர் மாற்றம்

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் ஊடகங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

கமல் மீது வழக்கு! சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் 'இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார்

கலைப்புலி எஸ்.தாணுவின் 'இந்திரஜித்' திரை முன்னோட்டம்

ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் விஜய் நடித்த 'தெறி' ஆகிய இரண்டு பெரிய சூப்பர்ஹிட்டை கடந்த ஆண்டு கொடுத்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் அடுத்த படைப்பு இந்திரஜித்.

AAA ஓடாது என்று எனக்கு முன்பே தெரியும: ஆதிக் ரவிச்சந்திரன்

சிம்புவின் திரையுலக வாழ்வில் மோசமான தோல்வியை பெற்ற படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படமாகத்தான் இருக்கும். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம்

25 வருஷம் ஆச்சு இப்படி ஒரு படம் பார்த்து! சிவகுமார்

இயக்குனர் கோபி நயினார் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அனைத்து தரப்பினர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.