close
Choose your channels

இன்னும் 35 நாட்கள் தான்: தனது படத்தின் ரிலீஸ் தேதியை குட்டி ஸ்டோரி போல் சொன்ன நிவேதா தாமஸ்..

Thursday, July 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நிவேதிதா தாமஸ் தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஸ்டோரி போல சொன்னதை அடுத்து ரசிகர்கள் அதை ரசித்து வருகின்றனர்.

விஜய் நடித்த ’ஜில்லா’ ரஜினி நடித்த ’தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதா தாமஸ், ’35 சின்ன விஷயம் அல்ல’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் கௌதமி, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இன்னும் இந்த படம் வெளியாக 35 நாட்கள் தான் இருக்கின்றன என்பதை நிவேதா தாமஸ் ஒரு குட்டி ஸ்டோரி போல இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

எப்போதாவது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான் செல்பி எடுப்பேன், முதல் இரண்டாவது புகைப்படங்களுக்கு இடையே உள்ள கணத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன், இன்னும் எனது படம் வெளியாக 35 நாட்கள் இருக்கின்றன, சின்ன குழந்தை போல அந்த படத்தை திரையில் பார்க்கும் ஆர்வத்தில் நான் இருக்கிறேன்.

எனது முகத்தில் ’35 சின்ன விஷயம் அல்ல’ படம் சிரிப்பினை வரவழைத்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தினை எனது படம் என்று நான் பெருமையாக கூறிக் கொள்வேன். ஆனால் அதே நேரத்தில் 35 நாட்களுக்கு பிறகு இது உங்கள் படமாக இருக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.

குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் நிவேதா தாமஸ் பதிவு செய்துள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment