நீங்க எல்லாம் மனுஷங்க தானா? ரசிகர்களை வறுத்தெடுத்த கமல்-ரஜினி பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனின் 'பாபநாசம்', ரஜினியின் 'தர்பார்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸ், சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடும்போது, ரசிகர்கள் கேட்ட ஒருசில சர்ச்சைக்குரிய கேள்விகளால் கடுப்பாகி, 'நீங்கள் சக மனிதர்களோடு பேசுகிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள்' என்று ரசிகர்களை வறுத்தெடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'எனக்காக நேரம் ஒதுக்கி என்னிடம் கேள்வி கேட்ட அனைவருக்கும் நன்றி. நீங்கள் கேட்ட நகைச்சுவையான கேள்விகளுக்கு மகிழ்ச்சியுடன் பதில் அளித்தேன். ஆனால் சில மோசமான கேள்விகளை பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டேன். அவர்கள் எல்லாம் சக மனிதருடன் உரையாடும் மனிதர்கள் தானா? என்ற சந்தேகம் எழுகிறது. மரியாதையுடனும் கண்ணியமாகவும் பேசுவது நல்லது' என்று கூறியுள்ளார்
நடிகை நிவேதாவிடம் ஒருசில ரசிகர்கள் 'திருமணம் எப்போது? காதலர் இருக்கின்றார்களா? கன்னித்தன்மையுடன் இருக்கின்றீர்களா? உள்பட ஒருசில ஆபாச கேள்விகளை கேட்டதால் அவர் டென்ஷன் ஆனதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments