நீங்க எல்லாம் மனுஷங்க தானா? ரசிகர்களை வறுத்தெடுத்த கமல்-ரஜினி பட நடிகை!

  • IndiaGlitz, [Monday,November 11 2019]

கமல்ஹாசனின் 'பாபநாசம்', ரஜினியின் 'தர்பார்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸ், சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடும்போது, ரசிகர்கள் கேட்ட ஒருசில சர்ச்சைக்குரிய கேள்விகளால் கடுப்பாகி, 'நீங்கள் சக மனிதர்களோடு பேசுகிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள்' என்று ரசிகர்களை வறுத்தெடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'எனக்காக நேரம் ஒதுக்கி என்னிடம் கேள்வி கேட்ட அனைவருக்கும் நன்றி. நீங்கள் கேட்ட நகைச்சுவையான கேள்விகளுக்கு மகிழ்ச்சியுடன் பதில் அளித்தேன். ஆனால் சில மோசமான கேள்விகளை பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டேன். அவர்கள் எல்லாம் சக மனிதருடன் உரையாடும் மனிதர்கள் தானா? என்ற சந்தேகம் எழுகிறது. மரியாதையுடனும் கண்ணியமாகவும் பேசுவது நல்லது' என்று கூறியுள்ளார்

நடிகை நிவேதாவிடம் ஒருசில ரசிகர்கள் 'திருமணம் எப்போது? காதலர் இருக்கின்றார்களா? கன்னித்தன்மையுடன் இருக்கின்றீர்களா? உள்பட ஒருசில ஆபாச கேள்விகளை கேட்டதால் அவர் டென்ஷன் ஆனதாக கூறப்படுகிறது
 

More News

தளபதி 64 படத்தில் ஆண்ட்ரியா கேரக்டர் குறித்த ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இன்று மாலை மணிரத்னம் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு ரூபாய் 500 கோடிக்கு மேல் பிரம்மாண்டமான பட்ஜெட்டி

பாலியல் குற்றவாளிகளுடன் உறவாடலாமா? கமல்ஹாசனுக்கு சின்மயி கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல பாடகி சின்மயி. சின்மயியின்

பிரபல நடிகரின் மகன் வாங்கிய இரண்டு தங்க மெடல்கள்

கோலிவுட் நடிகர்கள் ஒருபக்கம் நடிப்பில் சாதனை செய்து வரும் நிலையில் அவர்களது வாரிசுகள் பல்வேறு துறைகளில் சாதனை செய்து பதக்கங்கள் குவித்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

பாரதிராஜாவுடன் காலை உணவை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 6 ஆண்டுகளாக திரைப்படங்கள் எதையும் ஏற்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே