நடுரோட்டில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் நிவேதே பெத்துராஜ்.. என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நிவேதா பெத்துராஜ் நடு ரோட்டில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகில் ’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், அதன் பிறகு ’பொதுவாக எம்மனசு தங்கம்’ ’டிக் டிக் டிக்’ ‘திமிரு புடிச்சவன்’ ’சங்கத்தமிழன்’ ’பொன் மாணிக்கவேல்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரிகள் அவரது காரை வழிமறித்து வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று கூறியதாகவும், கார் டிக்கியை திறந்து காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது நிவேதா பெத்துராஜ் முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இதனை வீடியோ எடுத்த நபர் மீதும் நிவேதா ஆத்திரப்பட்டு மொபைலை கீழே தள்ளிவிட்டது போன்ற காட்சியும் அதில் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து இது உண்மையாக நடந்த நிகழ்வா? அல்லது ஏதேனும் ஒரு திரைப்படத்திற்கான புரமோஷனா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக இந்த வீடியோவில் உள்ள காவல்துறை அதிகாரி காலில் ஷூ அணியாமல் இருப்பதை பார்த்து கண்டிப்பாக இது திரைப்பட புரமோஷன் ஆகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர். இது குறித்து நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Promotion stunt ayyi untadhi 😂
— Filmy Bowl (@FilmyBowl) May 30, 2024
Police enti Crocs eskoni Duty chesthunadu 🥲#Nivethapethuraj pic.twitter.com/fV864CjFTj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com