நிவேதா பெத்துராஜின் போலீஸ் சோதனை வீடியோ.. சஸ்பென்ஸ் உடைந்தது.. நடந்தது இதுதான்..!

  • IndiaGlitz, [Saturday,June 01 2024]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென காவல்துறை அதிகாரிகள் அவருடைய காரை வழிமறித்து சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், குறிப்பாக டிக்கியை திறந்து காட்டுங்கள் என்று கூறிய போது அவர்களிடம் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த சம்பவத்தை தனது செல்போனில் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் நிவேதா பெத்துராஜ் கோபப்பட்டதும் அவருடைய செல்போனை தட்டிவிட்ட காட்சிகளும் அந்த வீடியோவில் இருந்தது.

இந்த வீடியோ உண்மையாக நடந்த நிகழ்ச்சியா? அல்லது நிவேதா பெத்துராஜ் நடிக்கும் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியா? என்ற சந்தேகத்தை ஆரம்பம் முதலே ரசிகர்கள் எழுப்பி வந்தனர். குறிப்பாக நிவேதா பெத்துராஜிடம் பேசிக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியின் காலில் ஷூ இல்லை என்பதே இந்த சந்தேகத்திற்கு பெரும் காரணமாக இருந்தது.

இந்த நிலையில் இது ஒரு புரமோஷன் வீடியோ என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிவேதா பெத்துராஜ் நடிக்கும் தமிழ் தெலுங்கு வெப் தொடரான ‘பருவு’ என்ற தொடரின் படப்பிடிப்பு தான் இந்த வீடியோ என்றும் அவருடைய காரில் ஒரு பிணத்தை வைத்திருந்த நிலையில் அதை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கொண்டு போவதற்காக அவர் வாக்குவாதம் செய்யும் காட்சி அந்த வெப் தொடரில் வருகிறது என்றும் அந்த காட்சியின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் முழு வீடியோவை ஜீ5 தெலுங்கு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் இது குறித்து தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

ஹன்சிகாவை வித்தியாசமாக மாற்றிய பிரபல இயக்குனர்.. மேக்கிங் வீடியோ வைரல்..

தமிழ் சினிமாவின் அழகான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவை வித்தியாசமாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது படத்தில் காட்டி இருக்கும் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அஜித்? இது நடக்க வாய்ப்பு இருக்கா?

அஜித் இதுவரை ஒரு சில படங்களில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்திருந்தாலும், எந்த ஹீரோவுக்கும் வில்லனாக நடிக்கவில்லை என்ற நிலையில் ஒரு பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுவது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை அவமதிக்கப்பட்டாரா? அதிர்ச்சி வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை உள்ளனர்

பாலாவின் 'வணங்கான்' ரிலீஸ் தகவலை அறிவித்த தயாரிப்பாளர்.. 'இந்தியன் 2' படத்திற்கு முன்பா? பின்பா?

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்  தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை

12 வருடத்திற்கு முன் சிம்பு.. இன்று அதே இடத்தில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு..!

12 வருடங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு ஒன்றிற்காக சிம்புவுடன் வந்த அதே இடத்தில் தற்போது நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது