ரகளை செய்தபடி மொட்டை மாடியில் பிறந்தநாள் கொண்டாடிய தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் சினிமாவில் “ஒருநாள் கூத்து“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்தப் படத்தில் இடம்பெற்ற “அடியே அழகே“ எனும் பாடலுக்கு வசீகரமான தோற்றத்தில் வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் இளைஞர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தார்.
அதற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து “பொதுவாக எம் மனசு தங்கம்“ படத்தில் நடித்த இவர் “டிக் டிக் டிக்“ திரைப்படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். அதேபோல தெலுங்கில் “மதிலோ“ எனும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பெத்துராஜ் அங்கும் வரவேற்பு பெற்று நடித்துவருகிறார்.
தற்போது “பார்டி“, “ஜலஜால கில்லாடி“ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் பார்முலா ஒன் கார் ஓட்டுவதற்கும் பயிற்சி பெற்றுவருகிறார். சிறு வயதில் இருந்தே கார்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் தற்போது பார்முலா ஒன் கார்களை ஓட்டுவதற்கான லெவல் ஒன் பயிற்சியை முடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நிவேதோ பெத்துராஜ் தனது 30 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக கொண்டாடியுள்ளார். இதற்காக மொட்டைமாடிக்கு சென்ற நிவேதா அங்குள்ள குட்டிச் சுவர் ஒன்றின்மீது ஏறி நின்றுக்கொண்டு தோளில் மின்விளக்கு மற்றும் தனது வயதைக் குறிப்பிடும் 30 என்ற எண்ணை வைத்துக்கொண்டு நடனம் ஆடியபடியே உற்சாகமாக காட்சியளிக்கிறார்.
இதையடுத்து நடிகை நிவேதா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை நிவேதா பெத்துராஜிற்கு அவரது ரசிகர்கள் மற்றம் பிரபலபங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com