நிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை?
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கக் கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் நிவர் புயல் உருவாகி அந்த புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது
நிவர் புயல் உருவான பின்பு தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை பிற்பகல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும், அதேபோல் நாகை தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் பிற தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments