நிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை?

வங்கக் கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் நிவர் புயல் உருவாகி அந்த புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது

நிவர் புயல் உருவான பின்பு தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை பிற்பகல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

புயல் கரையை  கடக்கும்போது தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும், அதேபோல் நாகை தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் பிற தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

More News

நெருங்கி வரும் நிவர் புயல்; சென்னை உள்பட 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்க உள்ளது. குறிப்பாக மாமல்லபுரம் மற்றும் காரைக்கால்

’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

விஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

முடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' என்ற திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படமும் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்

'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா? தயாரிப்பாளர் விளக்கம் 

சிம்பு நடித்து வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 'மாநாடு' படத்தின் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது