நிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம்!
- IndiaGlitz, [Tuesday,November 24 2020]
வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நிவர் புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஏழு மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் தங்கள் சொந்த வாகனங்களில் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் இவர் புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜெனரேட்டர் மூலம் மின் வசதி, தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள், பாய் போர்வை மெழுகுவர்த்தி ஆகிய வசதிகள் இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்யும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது