தமிழ் நடிகை ஆர்டர் செய்த சாப்பாட்டில் கரப்பான்பூச்சி: அதிர்ச்சியுடன் செய்த பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகை ஒருவர் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
‘ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’டிக் டிக் டிக்’, சங்க தமிழன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் வழக்கமாக ஆன்லைனில் உணவு வாங்கி சாப்பிடும் பழக்கத்தை கொண்டவர் என்றும் சமீபத்தில் அவர் வாங்கிய பிரைட் ரைஸ் உணவில் கரப்பான்பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறு உணவில் கரப்பான்பூச்சி இருப்பது இது முதல் முறை அல்ல என்றும் ஏற்கனவே தான் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்தது என்றும் தற்போது இரண்டாவது முறையாக இவ்வாறு நடந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உணவு என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிய ஒன்று என்றும் அதில் இவ்வளவு கவனக்குறைவாக கரப்பான் பூச்சியை வைத்து அனுப்பியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளன நிவேதா பெத்துராஜ் சம்பந்தப்பட்ட நிறுவனம் இது குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com