close
Choose your channels

'அசல் இருப்பாரு, இருக்கணும்': நிவாஷினி பேச்சுக்கு கமல் கூறிய பதிலடி!

Sunday, October 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அசல் இருப்பாரு, இருக்கணும்’ என நிவாஷினி கூறியதற்கு கமல்ஹாசன் கூறிய பதிலடி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப் பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர்களில் 4 பேர் சேவ் செய்யப்பட்ட நிலையில் மகேஸ்வரி, அசீம் மற்றும் அசல் ஆகிய மூன்று பேர் மட்டுமே டேஞ்ஜர் ஜோனில் உள்ளனர்.

இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் கமல்ஹாசன் மூவரிடமும் நீங்கள் காப்பாற்ற வருவீர்களா? என்று கேட்டார். அப்போது ’தான் நிச்சயம் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக' மகேஸ்வரி தெரிவித்தார்.

இது குறித்து அசீம் கூறியபோது ’நான் தப்பு செய்து உள்ளேன், எனவே மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறினார். இதனை அடுத்து அப்பாவியாக அசல், ‘நான் என்ன செய்துவிட்டேன் என்று என்னை இங்கே மக்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று முழித்து கொண்டிருக்கின்றேன்’ என்று கூறினார்.

இதனை அடுத்து நிவாஷினி இடம் இது குறித்து கமல் கருத்து கேட்ட போது 'அசல் இருப்பாரு, இருக்கணும்’ என்று கூறினார். அவர் கூறிய அடுத்த நிமிடமே எலிமினேட் செய்யப்படுபவர் யார் என்ற அட்டையை எடுத்து கமல் காட்ட அதை பார்த்து நிவாஷினி அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய புரோமோ வீடியோ முடிவடைந்து உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அசல் எலிமினேட் செய்யப்பட்டு நேற்று வீட்டுக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment