நிவர் புயல் கரையை கடந்தது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்!
- IndiaGlitz, [Thursday,November 26 2020]
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.30 மணி முதல் அதிகாலை 2 30 மணி வரை கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது
புதுவை அருகே மரக்காணம் என்ற பகுதியில் இந்த புயல் கரையை கடந்ததாகவும் அதிதீவிர புயலாக இருந்த நிவர், தீவிர புயலாக வலுவிழந்தது முழுமையாக கரையை கடந்து விட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என்றும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடந்து உள்ளதால் சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடவில்லை என்றும் புயல் மூலம் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் சில மணி நேரங்களில் தெரியும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
புயல் கரையை கடந்த போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் புயல் கரையை கடந்தாலும் பலத்த காற்று தொடர்ந்து சில மணிநேரங்கள் வீசக்கூடும் என்றும், புயல் வலுவிழந்த பின்னரும்கூட கனமழை தொடரும் என்றும் குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது