திடீரென பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு
- IndiaGlitz, [Wednesday,July 26 2017]
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். சற்று முன்னர் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அவர்களை சந்தித்து நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் பீகார் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேஜஸ்வி துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் இருந்து மறைமுகமாக வலியுறுத்தப்பட்டதாகவும், இதற்கு முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் ஒப்புக்கொள்ளாததால் நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகார் மாநிலத்தை நிதீஷ்குமார் தனது நிர்வாகத்திறமையால் முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.