CAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..! நிதிஷ் குமார்.

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

பீகாரில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு விவாதம் நடைபெற வேண்டும், என்றும் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது.

பீகார் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் லல்லு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மதம் சார்ந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும், அனைவரும் விரும்பினால், சட்டப்பேரவையிலே சிறப்பு விவாதம் நடத்தலாம் என்று அவர் கூறினார். NRC குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்றும் அவர் கூறினார். CAA-NRC பீகாரில் செயல்படுத்தப்படாது என்று ஜேடியு துணைத் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் தனது ட்வீட்டரில் நேற்றைய தினம் தெரிவித்ததை தொடர்ந்து, நிதிஷ் குமார் இன்று இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வருடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிதிஷ்குமாருக்கு எதிராக ஜேடியு கட்சியின் ஒரு பிரிவினர் பொது வெளியிலும், ஊடகத்திலும் கடும் விமர்சனங்களை எழுப்பினர். தொடர்ந்து, அக்கட்சியின் துணைத் தலைவரான பிராசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தனது ட்வீட்டரில் தெரிவித்திருந்தார்.
 

More News

விசாவை தவறவிட்ட இந்திய மாணவி.. தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..!

துபாயில் யு.கே. மாணவர் விசாவை இந்தியப் பெண் காரில் தவறவிட்டார். அவரைத் தேடிச் சென்று விசாவை ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

பிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..!

'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்'"

என் வயது முக்கியமில்லை.. மக்களுக்காக நான் செய்யும் பணி தான் முக்கியம்..! அமித்ஷாவுக்கு ம.பி முதல்வர் பதிலடி.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை.

கேபிள் டிவியில் ஒளிபரப்பான 'தர்பார்': அதிர்ச்சியில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கடந்த நான்கு நாட்களில் 128 ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதை மட்டும் என்னை யாராலும் செய்ய வைக்க முடியாது: வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்