CAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..! நிதிஷ் குமார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
பீகாரில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு விவாதம் நடைபெற வேண்டும், என்றும் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது.
பீகார் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் லல்லு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மதம் சார்ந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும், அனைவரும் விரும்பினால், சட்டப்பேரவையிலே சிறப்பு விவாதம் நடத்தலாம் என்று அவர் கூறினார். NRC குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்றும் அவர் கூறினார். CAA-NRC பீகாரில் செயல்படுத்தப்படாது என்று ஜேடியு துணைத் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் தனது ட்வீட்டரில் நேற்றைய தினம் தெரிவித்ததை தொடர்ந்து, நிதிஷ் குமார் இன்று இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வருடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிதிஷ்குமாருக்கு எதிராக ஜேடியு கட்சியின் ஒரு பிரிவினர் பொது வெளியிலும், ஊடகத்திலும் கடும் விமர்சனங்களை எழுப்பினர். தொடர்ந்து, அக்கட்சியின் துணைத் தலைவரான பிராசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தனது ட்வீட்டரில் தெரிவித்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout