ஜெய் நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

ஜெய், அஞ்சலி நடித்த பலூன்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் ஜெய் தற்போது நடிகர் நிதின்சத்யா தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு 'ஜருகண்டி' என்ற டைட்டிலை படக்குழுவினர் சற்றுமுன்னர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபாமோனிகா ஜான் நடித்து வருகிறார். இவர் விஷாலின் 'துப்பறிவாளன்' நாயகி அனுஇமானுவேலின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் டைட்டில் குறித்து படத்தின் தயாரிப்பாளர் நிதின்சத்யா கூறியபோது, அனைவரும் 'ஒரு நாடு ஒரு வரி’ என்பதை விரும்புகிறார்கள்.  ‘ஜருகண்டி’ என்பதை 'ஒரு நாடு ஒரு சொல்’ என்பதை குறிக்கும்படியாக வைத்திருக்கிறோம்.  ‘ஜருகண்டி’ என்பது மிகப் பிரபலமான வார்த்தை. இந்த வார்த்தையை நம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். இந்த வார்த்தைக்கு தள்ளு என்று அர்த்தம். எங்கள் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். அதனால் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்திருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.