மாட்டுச் சாணத்தில் பெயிண்ட்… அசத்தும் இந்தியக் கண்டுபிடிப்பு!!!
- IndiaGlitz, [Saturday,December 19 2020]
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் பெயிண்ட் சந்தைக்கு வர உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டிவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட வேதிக் பெயிண்ட் அறிமுக்கப்படுத்தப் பட்டு உள்ளது” எனத் தெரிவித்து உள்ளார்.
பொதுவாக மாட்டுச் சாணம் கிருமி நாசினியாகவும், உரமாகவும் பயன்படுகிறது. அதேபோல சமையல் எரிவாயு பொருட்களைத் தயாரிக்கவும் மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மாட்டுச் சாணத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் இருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியே ஒப்புக்கொண்டு உள்ளதாகப் பலரும் கூறிவருகின்றனர்.
இதனால் மாட்டுச் சாணம் மற்றும் அதன் சிறுநீரை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் சுற்றுச்சூலுக்கு பயன் அளிக்கும் வகையில் மாட்டுச் சாணத்தில் இருந்து பல பொருட்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் கோமியத்தை உட்கொண்டால் நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம் எனச் சிலர் கூறிவந்தனர். இது அறிவியல் முறையில் நிரூபிக்கப்படாதது எனப் பலரும விமர்சனம் வைத்த நிலையிலும் சில வடமாநிலங்களில் மாட்டு கோமியம் நல்ல விலைக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அடுத்ததாக மாட்டு கோமியத்தில் இருந்தே சானிடைசர் ஏன் மாஸ்க் கூட உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கிருமிநாசினியாக இருக்கும் மாட்டுச் சாணத்தை வைத்து பெயிண்ட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ग्रामीण इकोनॉमी को बल मिले और किसानों को अतिरिक्त आमदनी हो इसलिए Khadi and Village Industries Commission के माध्यम से हम जल्द ही गाय के गोबर से बना ‘वैदिक पेन्ट' लॅान्च करने वाले हैं। @ChairmanKvic pic.twitter.com/zhQpa3Es5i
— Nitin Gadkari (@nitin_gadkari) December 17, 2020